Advertisment

மகன் எடுத்த வீடியோவில் பதிவான காட்சி; பரிதாபமாக பிரிந்த தந்தையின் உயிர்

Father drowned in the water in front of his son

Advertisment

வேலூர் அடுத்த அரியூர் மலைக்கோடி பகுதியைச் சேர்ந்தவர் ஜேசிபி ஓட்டுநர் கார்த்தி (37). இவர் நேற்று தனது மகன், மகளுடன் சித்தேரியில் உள்ள கைவிடப்பட்ட கல் குவாரியில் தேங்கி இருக்கும் நீரில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கார்த்திக் தனது பிள்ளைகள் கண்முன்னே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

தகவல் அறிந்து வந்த அரியூர் காவல் துறையினர், வேலூர் தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கார்த்திக் குளிக்கும் காட்சியை அவரது 13 வயது மகளே வீடியோ எடுத்துள்ளார். அதில் கார்த்திக் மூச்சு திணறி நீரில் மூழ்கி உயிரிழக்கும் காட்சி பதிவாகியுள்ளது. பிள்ளைகள் கண்முன்னே தந்தை பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vellore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe