/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/SIREN-ART_42.jpg)
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாமுவேல் சங்கர் (வயது 78). இவருக்கு நீரழிவு நோய் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவரது மகள் விந்தியா (வயது 35) என்பவருக்குத் திருமணமாகி விவாகரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் சாமுவேல் சங்கர் நீரழிவு நோய் காரணமாக டயாலிசிஸ் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதற்காகச் சென்னை வந்து செல்லும் சூழல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காகச் சென்னை அடுத்துள்ள ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயல் பகுதியில் தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் தான் கடந்த நான்கு மாதங்களாக இவர்கள் இருவரும் வசித்து வந்த வீடு பூட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதே சமயம் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தந்தை மற்றும் மகள் ஆகிய இருவரும் இறந்த நிலையில் உடல் அழுகிய நிலையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முதல் கட்டமாகச் சந்தேகம் மரணமாக வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து சாமுவேல் சங்கருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் எபினேஷ் என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின்னாக பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது. தந்தை மற்றும் மகள் இருவரும் மர்மான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)