Advertisment

மகளை கொலை செய்த தந்தை; சிதம்பரத்தில் பயங்கரம்!

inves

சிதம்பரம் அருகே பட்டதாரி மகளை கழுத்தை அறுத்து தந்தை கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

Advertisment

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணலூர் ஊராட்சிக்கு உட்பட்ட டி.மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன். கூலி தொழிலாளியான இவருக்கு  2 மகன்கள் மற்றும் ஒரு மகள் அபிதா (வயது 26) இருந்தனர். இவர் கல்லூரியில் படிக்கும் போது ஏற்பட்ட பழக்கத்தால் காதலித்து வந்துள்ளார்.  இதற்கு தந்தை எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். மேலும் மகளுக்கு பல்வேறு திருமண வரன்கள் பார்த்து வந்த நிலையில் அவர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த தந்தை இது குறித்து கேட்டபோது தந்தைக்கும் மகளுக்கும் வீட்டில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மேலும் கோபம் அடைந்த அர்ஜுனன் (அச்சமயத்தில் அர்ஜுனன் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது) மகள் அபிதாவை மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதனை தொடர்ந்து அருகே உள்ள புத்தூர் காவல் நிலையத்தில் அர்ஜுனன் சரணடைந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

 

chidamparam Cuddalore daughter father incident
இதையும் படியுங்கள்
Subscribe