Advertisment

திருமணம் செய்து வைக்க கோரி தகராறில் ஈடுபட்ட மகனை அடித்து கொன்ற தந்தை!

The father who beat his son in a dispute to get married

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது களவனூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் விவசாயியான கேசவன். இவரது மகன் 30 வயது சின்னமணி என்கிற சிவமணிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் மணி தினசரி குடித்துவிட்டு வந்து தாய், தந்தையிடம் தகராறு செய்துவந்துள்ளார். தனக்குத் திருமணம் செய்துவைக்குமாறு தந்தையிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுவந்தார்.

Advertisment

இந்நிலையில், நேற்று (16.12.2021) இரவு வழக்கம் போல் குடிபோதையில் வீட்டுக்கு வந்த சிவமணி தந்தையிடம் கடும் தகராறில் ஈடுபட்டுள்ளார். தந்தை - மகன் ஆகிய இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மகன் சிவமணியை தந்தை சரமாரியாக தாக்கி, கத்தியால் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிவமணி, சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அருகில் இருந்தவர்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிவமணி பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisment

இதுகுறித்து தனிப்படை போலீசார் வழக்குப் பதிவுசெய்து தலைமறைவாக உள்ள கேசவனை தேடிவருகின்றனர். தந்தையே மகனை வெட்டிக் கொலை செய்த சம்பவம் உளுந்தூர்பேட்டை சுற்றுப்பட்டு கிராம மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

affair father kallakurichi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe