father attacked daughter at trichy

திருச்சி கொட்டப்பட்டு ஜெ.ஜெ. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சகாய சேவியர் (வயது 62). தனியார் நிறுவன காவலாளி. இவரது மகள் ஜாஸ்மின் ரோஸ் (20). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிபிஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

Advertisment

இந்த நிலையில் சகாய சேவியருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு தனித்தனியாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. கல்லூரி விடுமுறையில் ஊருக்கு வந்த ஜாஸ்மின் ரோஸ் தனது தாயாருடன் வசித்து வந்தார். இதற்கிடையே தந்தை வீட்டில் இருந்து தனது ஆடைகளை எடுப்பதற்காக ஜாஸ்மின் ரோஸ் அங்கு சென்றுள்ளார். இரவு பணியை முடித்துக் கொண்டு பகலில் சகாய சேவியர் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது கதவைத் தட்டி அவரது தூக்கத்தை மகள் கலைத்தார். இதனால் கோபம் அடைந்த சகாய சேவியர் மனைவி மீதுள்ள கோபத்தில் மகளை சரமாரியாக கைகளால் தாக்கியுள்ளார்.

Advertisment

இதனால் அவரது முகம் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட ஜாஸ்மினை அவரது தாயார் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.