Advertisment

சிறுமியை வன்கொடுமை செய்த வளர்ப்பு தந்தை மற்றும் வாலிபர் போக்சோவில் கைது!

Father and teenager arrested for molesting girl

Advertisment

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் சிறுப்பாக்கத்தை அடுத்த மங்களூரைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் மூன்று மாத கருவுடன் கருக்கலைப்புக்கு சென்றுள்ளார். அதையடுத்து மருத்துவர்கள் சிறுபாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா, சிறுபாக்கம் சப் இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி தலைமையிலான போலீசார் மருத்துவமனை சென்று சிறுமியிடம் விசாரித்தனர்.

விசாரணையில் மங்களூரைச் சேர்ந்த பிச்சமுத்து (60) என்பவர் சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வந்ததும், அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருவதும் தெரிய வந்தது.இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வெற்றிவேல்(29) என்பவர் சிறுமியிடம் சகோதரர்போல் பழகி நாளடைவில் ஆசை வார்த்தை கூறி கடந்த 6 மாதங்களுக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனையறிந்த அவரது வளர்ப்பு தந்தை பிச்சமுத்துவும், அதனை கூறி மிரட்டி தனது ஆசைக்கு இணங்குமாறு கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால், கருவுற்ற சிறுமி கருக்கலைப்பு செய்ய அரசு மருத்துவமனைக்கு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து, பிச்சமுத்து, வெற்றிவேல் இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

arrest POCSO
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe