father and sons incident police investigation

Advertisment

மின்சாரம் பாய்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு மகன்கள் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம், முகவூர் கிராமத்தைச் சேர்ந்த ஐயனார், அவருடைய மகன்களான ராணுவ வீரர் அஜித், சுதந்திரபாண்டி ஆகிய மூன்று பேரும், சிவகங்கை மாவட்ட எல்லையான மாரநாடு கிராமத்தில் முயல் வேட்டைக்கு சென்றதாகத் தெரிகிறது. அப்போது, பன்றிக்கு வைத்த மின்வேலியை மிதித்ததில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிகிறது.

இது குறித்து, தகவலறிந்த திருப்பாச்சேத்தி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த மூன்று பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக, மதுரை மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையான இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

உயிரிழந்த ராணுவ வீரர் அஜித், கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருந்தார். அவருக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. ஒரே குடும்பத்தில் தந்தை மற்றும் இரண்டு மகன்கள் உயிரிழந்தது முகவூர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.