Father and son sentenced to 7 years in jail for home invasion in Trichy

Advertisment

திருமணத்தை மீறிய உறவில் இருந்தவரை வீடு புகுந்து சரமாரியாக வெட்டியவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி ஏர்போர்ட் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் தங்கைக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த பாஸ்கரன் (30) அவரது தந்தை உபகாரனும்(55) கடந்த 2019 ஆம் ஆண்டு சரவணகுமாரின் வீட்டுக்குள் நுழைந்துசரவணகுமாரை வெட்டியுள்ளார் பாஸ்கர். மேலும் உபகாரனும் கத்தியால் இரண்டு முறை வயிற்றில் குத்தியுள்ளார். இதனைப் பார்த்த சரவணகுமாரின் மகன்கள் கர்ணன் மற்றும் மகேஷ் கார்த்திக் ஆகியோர் கூச்சலிட்டதில் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால் அவர்கள் இருவரும் தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து ஏர்போர்ட் காவல் நிலையத்தில் சரவணகுமாரின் மகன் கர்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து வழக்கானது தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

Advertisment

இந்நிலையில் இந்த வழக்கை நேற்று விசாரித்த தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மீனா சுந்தரி, சரவணகுமாரை கொல்ல முயற்சி செய்த பாஸ்கர் மற்றும் அவரது தந்தை உபகாரன் இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் இருவருக்கும் தலா 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.