Father and son passed away in lightning strike

Advertisment

வயலில் தேங்கிய தண்ணீரை வடிகட்ட சென்ற விவசயிகள் இடி மின்னல் தாக்கி பலியாகியுள்ள சம்பவம் மன்னார்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு தினங்களாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது. மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு மட்டும் 10 செ.மீ மழை பதிவாகியது.

இந்நிலையில் மன்னார்குடியை அடுத்த முக்குளம் சாத்தனூர் தளிக்கோட்டை காலனி தெருவைச் சேர்ந்த விவசாயி அன்பரசன்(55), தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள தனது வயலில் நேரடி நெல் விதைப்பு செய்திருக்கிறார். நேற்று இரவு பெய்த கன மழையில் வயலில் தண்ணீர் தேங்கியிருக்கும் என அஞ்சி தனது மகன் அருள்முருகனை (27) அழைத்துக்கொண்டு வயலுக்கு விரைந்துள்ளார்.

Advertisment

Father and son passed away in lightning strike

அப்போது தனது வயலில் தேங்கியிருந்த தண்ணீரை வடியவைக்க வடிகாலில் தண்ணீரை வெட்டிவிட்டுக்கொண்டிருந்தபோது திடீரென இடியுடன் மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே தந்தையும், மகனும் உடல் கருகி பரிதாபமாக உயிரழந்தனர். இதனை அறிந்த அன்பரசன் மற்றும் அருள்முருகனின் குடும்பத்தினர்நிலைகுலைந்தனர்.

இதுகுறித்து வடுவூர் காவல்துறை வழக்கு பதிவு செய்து உயிரழந்த இருவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். நள்ளிரவு என பார்க்காமல் வயலுக்கு சென்று பயிரை காப்பாற்றிட போராடிய தந்தை, மகன் மின்னல் தாக்கி உயிரழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியிலும், ஒட்டுமொத்த விவசாயிகள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.