Advertisment

‘நீட் தேர்வு எழுத அதிகாரிகள்தான் அறிவுறுத்தினர்..’-தந்தையும் மகனும் ஆள் மாறாட்ட வழக்கில் முன்ஜாமின் மனு!

சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த ரவிகுமார் மற்றும் அவருடைய மகன் ரிஷிகாந்த் ஆகிய இருவரும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் முன் ஜாமீன்கோரி மனு தாக்கல் செய்தனர்.

Advertisment

Father and son file bail plea before case

அம்மனுவில், ‘நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பான வழக்கில் என் மீதும் என் மகன் மீதும் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம். அதனைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையை அணுகுமாறு உத்தரவிட்டனர். நான் ரசாயன கம்பெனி ஒன்றில் தலைவர் பொறுப்பில் இருக்கிறேன். எனது மகன், தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வி பயில்வதற்காகச் சேர்ந்தார். இந்நிலையில், ஆள்மாறாட்டம் செய்ததாகக் கூறி வழக்கு பதிவு செய்து என்னையும் எனது மகனையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Father and son file bail plea before case

Advertisment

நாங்கள் இல்லாத நேரத்தில் வீடுகளில் சோதனை செய்து வருகின்றனர். நீட் தேர்வில் ஆள்மாறாட்ட முறைகேட்டில் நாங்கள் ஈடுபடவில்லை. ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்த போது, அந்தப் புகைப்படத்தில் மாறுபாடு இருந்தது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, ஹால் டிக்கெட்டில் திருத்தம் செய்வதற்கான காலக்கெடு முடிவடைந்துவிட்டதால், தேர்வினை எழுதுமாறு அறிவுறுத்தினர். ஆனால் தற்போது, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக என் மீதும் என் மகன் மீதும் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் தேடி வருகின்றனர். ஆகவே, இந்த வழக்கில் எனக்கும் எனது மகனுக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.

Father and son file bail plea before case

இவ் வழக்கு நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், தலைமை வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரியதால், அக்டோபர் 30-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

exam madurai hi court neet
இதையும் படியுங்கள்
Subscribe