/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/346_5.jpg)
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே துணி காயப்போடும் போது மின்சாரம் தாக்கி தந்தை மகன் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சிறுப்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் ராமர். இவரது மனைவி பெரியம்மா. இவர் துணிகளை தனது வீட்டில் இருந்த கொடியில் காயப்போட சென்றுள்ளார். இரும்பால் செய்யப்பட்டிருந்த கொடி மின் கம்பத்தின் ஸ்டே ஒயரை உரசியவாறு சென்றுள்ளது. இதை பெரியம்மா கவனிக்காமல் துணிகளை காயப்போட்டதால் அவரை மின்சாரம் தாக்கியுள்ளது.
மின்சாரம் தாக்கியதில் அதிர்ந்து கத்திய பெரியம்மாவினை பார்த்த அவரது மகன் மணிகண்டன் அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். அவருக்கும் மின்சாரம் தாக்கியது. அறுந்து விழுந்த மின்சார கம்பி அருகில் இருந்த பெரியம்மாவின் கணவர் ராமர் மீது விழுந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. மின்சாரம் தாக்கிய நிலையில் மகனும் சம்பவ இடத்தில் உயிரிழந்து விட்டார். பெரியம்மாவினை காப்பாற்றிய அப்பகுதி மக்கள் அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராமர் மற்றும் மண்கண்டனின் உடல்களை மீட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு மின்சாரம் தாக்கி அதில் தந்தை மகன் உயிர் இழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)