/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/34_102.jpg)
மும்பையை சேர்ந்தவர் 23 வயதான கல்லூரி மாணவி. இவர் விடுமுறை காலங்களில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுஜித் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் கல்லூரி மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை பதிவு செய்து வைத்துக்கொண்டு சுஜித் பணம் கேட்டி மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன மாணவி சுஜித் கேட்ட பணத்தையும் கொடுத்தாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சுஜித் மீண்டும் மாணவியிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அவரைத் தொடர்ந்து அவரது தந்தையும் கல்லூரி மாணவியை மிரட்டி ரூ.50 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். ஆனால் பணம் தராததால் அந்தரங்க புகைப்படத்தை இருவரும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி வளசரவாக்க காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரபடுத்தினர். அதில் கல்லூரி மாணவி கொடுத்த புகார் உண்மையை என்று தெரியவந்தது. அதையடுத்து சுஜித்(27), மற்றும் அவரது தந்தை வின்சென்ட்(55) இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மகனுக்கு அறிவுறைகூற வேண்டிய தந்தையும் சேர்ந்து கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய நடந்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)