தகச

தமிழகம் உட்பட நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளைக் கடக்க இன்று (15.02.2021) முதல் வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் (FASTag) கட்டாயம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளிலும் கார், லாரி, பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயமாகிறது. ஃபாஸ்டேக் (FASTag) இல்லாமல் சுங்கச்சாவடிக்கு வரும் வாகனங்கள் இரண்டு மடங்கு கட்டணத்தை அபராதமாகச் செலுத்த நேரிடும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் (National Highways Authority Of India) தெரிவித்துள்ளது. மேலும் ஃபாஸ்டேக் பெறுவதற்காக சுங்கச்சாவடிகளுக்கு அருகே முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஃபாஸ்டேக் இணையதளம் மூலமும் விண்ணப்பித்து ஃபாஸ்டேக் பெற்றுக்கொள்ளலாம். தற்போது 75%- க்கும் மேற்பட்டோர் ஃபாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டணம் செலுத்தி வருகின்றனர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.