Fast struggle is not for political purpose says SRMU

திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு, எஸ்.ஆர்.எம்.யூ., ரயில்வே தொழிற்சங்கம் சார்பில், ‘மத்திய அரசின் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ரயில் நிலையங்களை தனியார் மயமாக்கக்கூடாது’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திதிருச்சி ரயில் நிலையம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Advertisment

இதில், எஸ்.ஆர்.எம்.யூ சங்கப் பொதுச் செயலாளர் கண்ணையா, எஸ்.ஆர்.எம்.யூ மாநில துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் உள்ளிட்ட500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த உண்ணாவிரதப் போராட்டம் எந்தவித அரசியல் நோக்கத்திற்காகவும் நடத்தப்படவில்லை.மக்களின் நலனுக்காகவும், மத்திய அரசு ஊழியர்களின் நலனுக்காகவும் தான் நடத்தப்படுகிறது. மத்திய அரசு உரிய தீர்வு காணவில்லை என்றால் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம் என்று கண்ணையா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

Advertisment