Skip to main content

வேகமாக பரவி வரும் நீபா வைரஸ்! கேரள - தமிழக எல்லைப் பகுதிகளில் தொடர் கண்காணிப்பு! ராதகிருஷ்ணன் பேட்டி

Published on 21/05/2018 | Edited on 21/05/2018
rathakris

 

 


கேரளாவில் நீபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் நீபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இல்லை என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தமிழகத்தில் காய்ச்சல் குறித்து கண்காணிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீபா வைரஸ் காய்ச்சல் குறித்து தமிழக மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. நீலகிரி, கோவை உள்ளிட்ட கேரளாவை ஒட்டிய மாவட்டங்களில் கூடுதல் நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொண்டால் வைரஸ் பாதிப்பை தடுக்கலாம்.

தொடர்ந்து கண்காணிக்கும் படி பொது சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். கேரள - தமிழக எல்லைப் பகுதிகள் தொடர் கண்காணிப்பில் உள்ளது. பன்றிகள், பழம் தின்னும் வவ்வால்களால் நீபா வைரஸ் பரவி வருகிறது. தமிழக எல்லைப்புறப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்