Published on 18/02/2021 | Edited on 18/02/2021

மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி நாடு முழுவதும் விவசாயிகள் இன்று (18.02.2021) மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நான்கு மணி நேரம் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தனர்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து விவசாயிகள் தங்களுடைய ரயில் மறியல் போராட்டத்திற்குத் தயாராவதை அறிந்த காவல்துறை, அவர்களை வீட்டுக்காவலில் வைத்து தற்போது கைது செய்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக திருச்சியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் அனைவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்கும் வகையில், காவல்துறை சார்பில் சுமார் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினரைப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி உள்ளனர் .