Skip to main content

பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய விவசாயிகள்!

Published on 12/11/2018 | Edited on 12/11/2018

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் ஆனந்தபுரம் ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடிய ரயில்வே அதிகாரிகளை கண்டித்தும் போராட்டம் நடத்திய 98 விவசாயிகளுக்கு மீது நீதிமன்றத்தில் அபராதம் விதிக்கப்பட்டதால் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கையில் பணம் இல்லாதால் கோர்டுக்கு கட்ட வேண்டிய தொகையை கட்டுவதற்கு 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் துண்டு ஏந்தி பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்தினர்.

 

The farmers who carried out the begging fight!

 

பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு நம்மிடம் கூறுகையில், கடந்த 15ம் தேதி இரவு நேரத்தில் ஆனந்தரபுரதம் ரயில்வே கேட், கேட்கீப்பராக பணிபுரியும் பெண்ணிடம் ஒருவர் பேசிக்கொண்டுயிருக்கிறார். இதைப்பார்த்த மற்றொருவர் ஏன் அவனோடு பேசிக்கொண்டிருக்கிறாய் என்று கேட்க  இரண்டு பேருக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் அந்த பெண் கேட்கீப்பருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

 

 

இந்த பிரச்சனைக்கு பிறகு ஆனந்தபுரம் ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடிவிட்டனர். இந்த ரயில்வே கேட் வழியாக விவசாயிகளின் 2500 ஏக்கர் விவசாயம் அங்கே நடைபெறுகிறது. இதற்கு அந்த வழியேதான் பயன்படுத்தி வருகின்றனர். கேட் மூடியதால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரும் கலெக்டரிடம் மனு கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

 

 

இதனால் நாங்கள் கடந்த 15-ம் தேதி ரயில்வே கேட்டை திறக்க சொல்லி ரயில் மறியலில் ஈடுபட்டோம். இதில் 500 பேருக்கு மேல் கலந்துகொண்டோம். எங்கள் போராட்டத்தினால் வைகை எக்ஸ்பிரஸ் அரை மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டதால் மத்திய அரசிடம் மாநில போலிசுக்கு பிரஷர் வந்தனால் போராட்டத்தில் ஈடுப்பட்ட 95 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். 

 

நீதிமன்றத்தில் இருந்து ஒவ்வொருவரும் தலா 3,000 ரூபாய் அபராதம் கட்ட சொல்லி ஆஜர் ஆகா சொல்லி சம்மன் வந்திருக்கிறது. எங்களிடம் அபராதம் கட்டும் அளவிற்கு பணம் இல்லை என்பதாலும் பிச்சை எடுத்தாவது கட்டலாம் என்றுதான் இந்த போராட்டம் நடத்தினோம். இந்த போராட்டத்தில் எங்களுக்கு 1000 ரூபாய் கிடைத்தது என்றார். 

 

ரயில்வே கேட்டை திறக்க சொல்லி ரயில்வே டி.ஆர்.எம். அலுலக வளாகத்தில் உண்ணராவிரதம் இருக்க அனுமதி கேட்டும் தான் இந்த போராட்டம் நடத்தினோம் என்றார்.

சார்ந்த செய்திகள்