மழையால் சேதமடைந்தபயிர்கள் குறித்து தவறான முறையில் கணக்கெடுப்பை நடத்தும் தனியார்நிறுவனத்தைக் கண்டித்து, அழுகிய நெற்பயிர்களோடு நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வரலாறு காணாததொடர்மழையால்டெல்டாமாவட்டங்களின் நெற்பயிர்கள் தண்ணீரில் முழுகி நாசமாகின. இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் பல இடங்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நெற்பயிர்பாதிப்புகளைக்கணக்கெடுக்கும் பணிகளைக் காப்பீட்டுகுழுவினர் செய்து வருகின்றனர். அவர்கள் தவறான முறையில் கணக்கெடுப்பு நடத்துகின்றனர்எனகணக்கெடுப்பு நடத்தும் தனியார்இன்சூரன்ஸ்நிறுவனத்தைக் கண்டித்தும், வேளாண்துறைஅதிகாரிகளைக் கண்டித்தும் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக வந்த விவசாயிகள், ‘டெல்டாமாவட்டங்களைப் பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கிட வேண்டும்’ என அழுகிய நெற்பயிர்களோடு கண்டன கோஷங்களைஎழுப்பியவாறுவந்தனர்.
விவசாயிகளின் போராட்டம் கரணமாக நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்ட அதிவிரைவுப் படைபோலீசார்தடுப்புஅமைத்துபாதுகாப்புபணியில் ஈடுபட்டனர்.