Farmers who broke 500 coconuts on the road and fought!

தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்டடெல்டாமாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் நெல் என்பது மாறி தென்னை விவசாயமே பிரதானமாக மாறியுள்ளது.

Advertisment

ஒவ்வொரு மாதமும் கோடிக்கணக்கான தேங்காய்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்தனர்.கஜாபுயல் தென்னைவிவசாயிகளுக்குப்பேரிடியாக இறங்கி விளையாடியது. 80% தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தது. சில வாரங்கள் சோகத்திலிருந்த தென்னை விவசாயிகள் மீண்டும் தோட்டங்களில் இறங்கி கடினமாக உழைத்ததால் மீண்டும் தேங்காய்உற்பத்தியைப்பெருக்கியுள்ள நிலையில் தற்போது தேங்காய் விலை ரூ.7 க்குகீழே சரிந்துள்ளது. இதனால் தென்னை விவசாயிகள் கடன் மேல் கடன் வாங்கி வட்டிகூட கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில்தான் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் திரண்ட ஆயிரக்கணக்கான தென்னை விவசாயிகள் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து ஆளுக்கொரு தேங்காயுடன்ஊர்வலமாகச்சென்று பேருந்து நிலையம் அருகே 500-க்கும்மேற்பட்டதேங்காய்களைச்சாலையில் உடைத்தனர்.

மத்திய, மாநில அரசுகளேஉரித்ததேங்காய்களுக்குகிலோ ரூபாய் 50-க்கும்,கொப்பரைதேங்காய்க்குகிலோ ரூபாய் 150-க்கும்கொள்முதல் செய்ய வேண்டும்,ரேசன்கடைகளில்பாமாயிலுக்குபதிலாகத்தேங்காய் எண்ணெய்களை வழங்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

Advertisment