Skip to main content

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூட்டம்!

Published on 31/07/2020 | Edited on 31/07/2020

 

Image

 

பெரம்பலூரில் நடைபெற்ற விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகை உள்ளிட்ட பலவற்றை வலியுறித்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் இன்று (ஜூலை 31) காலை 11 மணிக்கு தலைமை நிர்வாகி திரு நூ.ஷே.முஹம்மது அஸ்லம் தலைமையில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது.

 

கரும்பு பெருக்க அலுவலர் வேணுகோபால், துணைத் தலைமை ரசாயணர் மாதவன், துணைத் தலைமைப் பொறியளர் மணிவண்ணன், தொழிலாளர் நல அலுவலர் ஆர்.இராஜாமணி, விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் செந்துறை ஞானமூர்த்தி, ராஜாஜெயராமன், ஏ.கே. இராசேந்திரன், நம்மக்குணம் சீனிவாசன், வரதராஜன் , தேவேந்திரன், பி.சி.இராமசாமி, சீகூர் பெருமாள், துங்கபுரம் சக்திவேல் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

 

இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவை,

 

  • நடப்பு கரும்பு அரவையை 14-12-2020 இல் துவக்கலாம் என முடிவு செய்துள்ள ஆலை நிர்வாகத்தின் முடிவை மாற்றி நவம்பர் 15 ஆம் தேதிவாக்கில் துவங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

 

  • ஆலையையும், இணைமின் திட்டத்தையும் புணரமைக்கும் பணிக்கு தேவையான உதிரிபாகங்களை உடனே வால்சந்த் நகர் நிர்வாகம் உடனே வழங்க வேண்டும்.

 

  • ஆலையில் உள்ள கெஸ்டு ஹவுஸ்சில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுக்கு ஒரு அறை ஒதுக்க வேண்டும்.

 

  • இணைமின் திட்டத்திற்கு பங்குத் தொகை வழங்கியவர்களுக்கு உடனடியாக பங்குப் பத்திரம் வழங்க வேண்டும்.

 

  • 2015-2016, 2016-2017 ஆம் ஆண்டுக்கு மாநில அரசு அறிவித்த (SAP) கூடுதல் விலை டன்னுக்கு ரூ. 450 வீதம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கி தொகை ரூ. 33 கோடியை தமிழக அரசு வழங்க வேண்டும்.

 

  • விவசாயிகளுக்கு விதைக்கரணை இலவசமாக வழங்க வேண்டும்.

 

  • நடப்பு பருவத்திற்கு வெட்டப்படும் கரும்புக்கு, தாமதம் இல்லாமல் வெட்டிய 15 தினங்களுக்குள் விவசாயிகளுக்கு பணம் வழங்க வேண்டும்.

 

  • இணைமின் திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கப்பட்ட வகையில் வரவேண்டிய தொகை ரூ. 15 கோடியை உடனே பெற வேண்டும். மற்ற ஆலைகளில் இருந்து வரவேண்டிய பாக்கி தொகையை உடனே பெறவேண்டும்.

 

  • கரும்பு வெட்டுவதற்குமுன் சாலைகளைச் சரிசெய்தும், சாலையின் குறுக்கே தொங்கும் நிலையில் உள்ள மின் கம்பிகளை உயர்த்தி கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

http://onelink.to/nknapp

 

  • காலிப் பணியிடங்களுக்கு தற்க்காலிக பணியாளர்கள் நியமிக்கும் போது பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்தவர்களை நியமிக்க வேண்டும்.

 

  • வெட்டாள்களை நியமிப்பதும், கூலியை வழங்குவதும் ஆலைநிர்வாகமே கண்காணித்து வழங்க வேண்டும்.

 

  • எரிந்த கரும்புகளை முன்னுரிமை அடிப்படையில் உடனே வெட்டி கழிவு இல்லாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ எங்களுக்கு உத்தரவிடுங்கள்...” - அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Minister KN Nehru in support of Arun Nehru at perambalur for lok sabha election

தமிழக அரசு மூலம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட  நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒன்றிய அரசிடமிருந்து  திட்டங்களைப் பெற்றுநிறைவேற்றிட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, அருன் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

பெரம்பலூர் பாராளுமன்றத் தி.மு.க வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து லால்குடியில் இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணி ரவுண்டானாவில் தொடங்கியது. முன்னதாக மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, லால்குடி சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரப் பேரணியைத் தொடங்கி வைத்து பேசுகையில், “லால்குடி சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நமது பகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நடைபெற்றிருப்பதை நன்கு அறிவீர்கள். மாநில அரசு செயல்படுத்தக்கூடிய திட்டங்களைக் காட்டிலும் ஒன்றிய அரசிடமிருந்து திட்டங்களைப் பெற்று நமது பகுதியில் நிறைவேற்றிட வேண்டும். இது நமது சொந்தத் தொகுதி என்பதால் அதிகமாகத் திட்டங்களைக் கொண்டு வந்து பணிகளைச் செய்திட உங்கள் ஆதரவு கேட்டு வந்துள்ளோம்.

Minister KN Nehru in support of Arun Nehru at perambalur for lok sabha election

எங்களுக்கு உத்தரவிடுங்கள், நாங்கள் பணியாற்றத் தயாராக உள்ளோம். லால்குடி நகராட்சி பகுதியில் புதிய பேருந்து நிலையம், தாலுகா அலுவலகம், அலுவலகத்திற்கு புதிய கட்டிடம், பொதுமக்கள் வசதிக்கேற்ப புதிய மார்க்கெட் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் எல்லாம் அடுத்த மாதம்  தொடங்கப்பட உள்ளது. எனவே இப்படிப்பட்ட எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றிட உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து அருண் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்றத் தி.மு.க வேட்பாளர் அருண் நேரு வாக்காளரிடம் வாக்கு சேகரித்தார்.

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார்.