Advertisment

மத்திய அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடத்திய விவசாயிகள் சங்கத்தினர்!

Farmers' Union protests against the  central government

தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி மற்றும் வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு குறு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தினர். அதில்பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையேற்றத்தை உடனடியாக குறைக்க வலியுறுத்தியும், பொதுமக்களை கற்காலத்திற்கு கொண்டு செல்லும் மத்திய அரசை கண்டித்தும், தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட விவசாயிகளின் பஞ்சமி நிலத்தை மீட்டுத்தர வலியுறுத்தியும் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Advertisment

முன்னதாக மனு கொடுக்க வந்தவர்கள்திட்டக்குடி EB அருகில் உள்ள தர்மகுடிக்காடு பெட்ரோல் பங்கிலிருந்து மாட்டு வண்டிகளில் மோட்டார் வாகனங்கள் மற்றும் சிலிண்டர்களுக்கு மாலையிட்டு ஏற்றி வந்தனர். இந்த பேரணி ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி நிறுவன தலைவர் தயா.பேரின்பம் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் பாண்டுரங்கன் மற்றும் மாநில துணைச் செயலாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சிறுமுளை வீரராஜன் நன்றி உரை கூறினார்.கட்சியின் கிளை நிர்வாகிகள் சுரேஷ்குமார் முருகப்பன் சின்ன ஏட்டு ராஜமாணிக்கம், பெரியசாமி, இளங்கோவன், செல்வம், விக்னேஸ்வரன் ஊமத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisment

Farmers Protest thittakudi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe