Farmers union leader Ayyakannu placed in jail under house arrest

Advertisment

விவசாயிகளின் விளைபொருள்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். விவசாயிகளின் வேளாண் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்.

அந்த வகையில் தியானம் இருக்கும் நரேந்திர மோடியை கண்டித்து கன்னியாகுமரியில் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணு புறப்பட்டு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு, தலைமையிலான மாநிலத் துணைத் தலைவர் மேகராஜன் மற்றும் விவசாயிகளை திருச்சி மலர் சாலை அண்ணாமலை நகர், பகுதியில் அவரது வீட்டில் சிறை பிடித்தனர்.

மேலும் வீட்டிலிருந்து வெளியில் வர விடாமல் வீட்டு காவலில் அடைத்து வைத்துள்ளனர். அந்த பகுதியில் 20-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.