விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராக்கெட் விடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

இந்தியா முழுவதும் மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் சார்பில் வேளாண் சட்டத்தை எதிர்த்து தயார் செய்யபட்ட துண்டு பிரசுரத்தை அதிகாரிகள் வாங்க மறுத்ததால் அதனை ராக்கெட் போல செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுப்பும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மனுக்கள் அடங்கிய ராக்கெட் விடப்பட்டது.

Advertisment