Farmers struggle

பாதிப்பிலிருக்கும் விவசாயத்தை பாதுகாத்திட கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

விவசாயத்தை அழிக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், பாசன வாய்க்கால்கள் தூர்வாருதல் மற்றும் ஏனைய செயல்படுத்தப் பட்ட திட்டங்களில் நடந்த முறைகேடுகளையும், அதற்கு துணை போகும் அதிகாரிகளை கண்டித்தும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். ஆனால் விவசாயத்தை காக்க முன் வைத்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை "போராட்டத்தை கைவிட மாட்டோம்' என விவசாயிகள் உறுதியாக கூறியதால் 30 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.