
தற்போது குறுவை சாகுபடி தொடங்கியுள்ள நிலையில், உரம் விலை திடீரென ரூ. 500 முதல் 800 வரை உயர்ந்துள்ளது.இதையடுத்துவிவசாயத்துக்கான யூரியா மற்றும் உரம் விலை உயர்வைக் கண்டித்து கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே வயல்வெளியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மணிமுத்தாறு நீர் பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் மணிமுத்தாறு பாதுகாப்புக் குழு சார்பில், ஒருங்கிணைப்பாளர் தங்க.தனவேல் தலைமையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவிவசாயிகள் கலந்துகொண்டு, தனிமனித இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசு உடனடியாக விலை ஏற்றத்தைத் திரும்பப் பெற வேண்டுமெனவும், பழைய விலைக்கே கிடைக்க வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)