Protest

Advertisment

விழுப்புரம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் விளைபொருளுக்கு முறையாகப் பணம் வழங்காததை கண்டித்து விவசாயிகள் திடீர் சாலை மறியல் நடத்தினர்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விழுப்புரம் பாண்டி நெடுஞ்சாலையில் போக்குவரத்து 10 நிமிடம் பாதிக்கப்பட்டது. சாலை மறியல் செய்தவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்ததை நடத்தினர். இதனைத் தொடர்ந்து சாலைமறியல் கைவிடப்பட்டது.