/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/darmers-pro.jpg)
விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைப்பதற்கு எதிராக விவசாயிகள் நடத்திவந்த உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. 14 நாட்களாக திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவடங்களில் விவசாய நிலங்களில் உயர் மின் அழுத்த கோபரங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல் வேறு விதமான போராட்டங்களை விவசாயிகள்நடத்திவந்தனர். இதற்கிடையில் நேற்றுசெய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உடுமலை ராதகிருஷ்ணன், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று உறுதி அளித்திருந்தார். அதன் அடிப்படையில் விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)