Petition to the District Collector Farmers who are unable to do

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரைவெட்டி பரதூரில், தொடர்ந்து பெய்த மழை காரணமாக நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் எடுக்க நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் மறுப்பதால் விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர்.

Advertisment

சனிக்கிழமை, நெல் கொள்முதல் நிலையத்தில் அறுவடையான நெல்லை எடுக்க மறுப்பதாக கூறி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் கரைவெட்டி பரதூர் கிராமத்திற்கே நேரில் வந்து ஆய்வு செய்தனர். அதன் பிறகுவிவசாயிகள் இன்று (02.03.2021) மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கரைவெட்டி பரதூர் கிராமத்தில் அறுவடையான ஏறத்தாழ 20 ஆயிரம் மூட்டைகளையும் உடனடியாக கொள்முதல் செய்யநடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள், விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தில் நெல்லை எடுக்க சிறப்பு அனுமதி கொடுத்துள்ளார்கள். அதே போல சிறப்பு அனுமதி பெற்று அரியலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனமாவட்ட ஆட்சியரிடம் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முகசுந்தரம் தலைமையில் மனு அளித்து கோரிக்கை வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கையைக் கேட்ட மாவட்ட ஆட்சியர்,உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். தமிழ்நாடு விவசாய சங்க பிரதிநிதி தங்கமலை, கரைவெட்டி பரதூர் ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன், முன்னாள் ஊ.ம.துணைத் தலைவர் செல்லப்பிள்ளை உள்ளிட்ட விவசாயிகள் பலர் உடனிருந்தனர்.

Advertisment