ADVERTISEMENT

'லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்'- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து!

05:04 PM Oct 15, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

நெல் கொள்முதல் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் புகழேந்தி, கிருபாகரன் அமர்வு முன்பு இன்று (15/10/2020) விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'அரசு அதிகாரிகள் ஊதியத்தைத் தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம். விவசாயிகள் கொண்டு வரும் ஒரு நெல்மணி முளைத்து வீண் போனால் அந்த பணத்தை அதிகாரியிடம் வசூலிக்க வேண்டும். அதிகாரியிடம் பணம் வசூலித்தால்தான் இதுபோன்ற நிகழ்வுகள் தடுக்கப்படும். விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என விவசாயிகள் போராடுவதைப் பார்க்க முடிகிறது.

நெல் கொள்முதல் செய்வதற்கான மாற்று ஏற்பாடுகளை அரசு விரைந்து முடிவெடுப்பது அவசியம். விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகளைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை?' என்று சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கு தொடர்பாக நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குனர் நாளை (16/10/2020) உரிய விளக்கம் தர உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT