Skip to main content

அதிகாரிகள் மட்டும் பங்கேற்ற குறை கேட்புக் கூட்டம்; விவசாயிகள் வெளிநடப்பு  

Published on 13/03/2023 | Edited on 13/03/2023

 

farmers meeting in virudhachalam sub collector office issue 

 

ஒவ்வொரு மாதமும் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுவது வழக்கம். இந்தக் கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் கலந்து கொள்வார்கள். கூட்டத்தில் விவசாயிகள் பிரச்சினைகள் தொடர்பாக விவசாயிகள் முன்வைக்கும் கேள்விகளுக்கும் கோரிக்கைகளுக்கும் அதிகாரிகள் பதில் கூறுவார்கள். மேலும் அந்தந்த துறைகளுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் மாவட்ட தலைநகருக்கு வந்து செல்வதால் கால விரயமும் நேர விரயமும் பொருளாதார விரயமும் ஏற்படும். இவற்றைத் தவிர்க்கும் பொருட்டும் விவசாயிகள் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்வு காண ஏதுவாகவும் ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது திங்கள் கிழமைகளில் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இரண்டாவது திங்கள் கிழமை கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் நடைபெறும் எனவும், மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கமான விவசாயிகள் குறை கேட்புக் கூட்டமும் நடைபெறும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் கே.பாலசுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.

 

அதையடுத்து மார்ச் மாதத்தின் முதல் திங்கள் கிழமையான கடந்த வார திங்கட்கிழமையன்று மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டங்களில் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டு அவரவர் பகுதி விவசாயிகள் பிரச்சனைகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கி கூறினர். இந்நிலையில் மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமையான இன்று கடலூர் மாவட்டத்தில் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் விருத்தாசலம், சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகங்களிலும் விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி விருத்தாசலம் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் கோட்டாட்சியர் லூர்துசாமி தலைமையில் நடைபெற்றது.

 

இதில் கலந்து கொள்வதற்காக விவசாய சங்கப் பிரதிநிதிகள்,  விவசாயிகள், பொதுமக்கள் பலரும் வருகை தந்தனர். விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் சார்-ஆட்சியர் அலுவலக நுழைவாயிலிலேயே இருக்கைகள் போடப்பட்டு அதில் விவசாயிகள் ஒரு பக்கமும் அதிகாரிகள் இன்னொரு பக்கமும் அமர வைக்கப்பட்டனர். விவசாயிகள் அதிகாரிகளை நேருக்கு நேர் பார்த்து பேச முடியாதபடி உட்புறமாக உட்கார்ந்து இருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், " சார் ஆட்சியர் அலுவலகம் உள்ளே செல்லக்கூடிய வாசற்படியில்  அமர வைத்து எதற்காக கூட்டம் நடத்துகிறீர்கள்?" என அதிகாரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை கண்டித்தும், போதிய இட வசதி இல்லாமல்  விவசாயிகளை அவமதிக்கின்ற வகையில் செயல்படும் அதிகாரிகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பிய படி அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

farmers meeting in virudhachalam sub collector office issue 

பின்னர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் குறைகளைக் கூறுவதற்காகக் கூட்டத்திற்கு வந்தால், அவர்களை இழிவுபடுத்தும் விதமாகச் செயல்படும் மாவட்ட நிர்வாகத்தின் அராஜக போக்கை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். விவசாயிகள் திடீரென்று கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதேசமயம் விவசாயிகளின் போராட்டத்திற்குப் பிறகு சார் ஆட்சியர் அலுவலக மாடியில் உள்ள கூட்ட அரங்கை சுத்தப்படுத்தி அங்கு சிறிது நேரத்திற்குப் பிறகு கூட்டம் நடைபெற்றது. ஆனால் இந்த கூட்டத்தில் விவசாயிகள் பெரும்பாலானோர் பங்கேற்கவில்லை. அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளாளர் முன்னேற்ற சங்க உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Vellalar Munnetra Sangha High Level Executive Meeting

தமிழ்நாடு வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் கழகத்தின் பாராளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து உயர்மட்ட நிர்வாகிகள் முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் ஆர்.வி. ஹரிஹரூன் தலைமையில் இன்று (12-03-24) நடைபெற்றது. இதில், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் சார்பில் பாராளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்த கருத்துகளை உயர்மட்ட நிர்வாகிகள் வழங்கினார்கள். மேலும், இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சோழிய வேளாளர் நலச் சங்கம் சார்பாக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள். இதில் தேர்தல் கூட்டணி, ஆதரவு நிலைப்பாடுகள் குறித்து தமிழ்நாடு முழுவதும் ஆலோசனைகள் மேற்கொண்டு இறுதி முடிவை வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் & கழகத்தின் உயர் மட்ட கமிட்டி விரைவில் அறிவிக்கும் என்று முடிவு செய்யப்பட்டது .

Next Story

“அனைவரும் ஒன்றுபட வேண்டும்” - விவசாயிகளுக்கு ஆதரவாக காலா பட நடிகர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nane patekar about farmers

இந்தி மற்றும் மராத்தியில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நானா படேகர். கடைசியாக தி வேக்ஸின் வார் படத்தில் நடித்திருந்தார். தமிழில் ரஜினியின் காலா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்போது ஜேர்னி (Journey) என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே மற்றொரு மராத்தி நடிகரான மகரந்த அனஸ்புரேவுடன் இணைந்து ‘நாம்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம் மகாராஷ்டிராவில் உள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். இந்த நிலையில், நாசிக்கில் நடைபெற்ற ஷேத்காரி சம்மேளன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், “விவசாயிகள் நல்ல நேரத்துக்காகக் காத்திருக்காமல் விடாமுயற்சியின் மூலம் நல்ல காலங்களைக் கொண்டு வர வேண்டும். 

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தங்கம் விலை உயரும்போது, அரிசி விலை ஏன் உயரவில்லை? விவசாயிகள் முழு தேசத்திற்கும் உணவு வழங்குகிறார்கள். ஆனால் அவர்களின் குறைகளை தீர்க்க அரசுக்கு நேரமில்லை. இதுபோன்ற அரசிடம் விவசாயிகள் எதையும் கோர வேண்டாம். எந்த மாதிரியான இலட்சியத்தை இளம் தலைமுறைக்கு முன் வைக்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நான் வெளிப்படையாக பேசும் நபர் என்பதால் என்னால் அரசியலில் சேர முடியாது. தற்போதைய நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்றார்.