Skip to main content

மத்திய, மாநில அரசுகள் சீர்குலைக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது... -வி.தொ.ச. மாநிலக்குழு

Published on 13/10/2018 | Edited on 13/10/2018
farmers


 

சிதம்பரத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநிலக்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் ஏ. லாசர் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாநில பொருளாளர் எஸ்.சங்கர், மாநில நிர்வாகிகள் சின்னதுரை, வசந்தாமணி, கடலூர் மாவட்ட செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் 70-க்கும் மேற்பட்ட  மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் விவசாய தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படும் போக்கு, டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து விரிவாக பேசப்பட்டது.
 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் லாசர், நூறுநாள் வேலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் சீர்குலைக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. ஏழைமக்களுக்கு சரியான வேலை கொடுப்பதில்லை. அப்படியே கொடுத்தாலும் கூலி கொடுப்பது இல்லை. இது சட்டத்திற்கு விரோதமான செயல்.
 

தமிழகத்தில் டெல்டா பகுதியாக உள்ள தஞ்சை திருவாரூர்,நாகை,கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் விவசாய தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். 20 ஆயிரம் ச.கீ.மீ பரப்பளவுக்கு விவசாய விளைநிலங்களை இந்த திட்டத்திற்காக எடுக்கிறார்கள் இதனால் 5 மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதரம் சீரழிக்கப்படும்.
 

வரும் 15-ந்தேதி 5 மாவட்டங்களில் விவசாய சங்கள் நடத்தும் முற்றுகை போராட்டத்தில் தொழிலாளர் சங்கம் கலந்து கொண்டு எதிர்பை தெரியப்படுத்தும். பின்னர் நெடுவாசலைபோல் தனி போராட்டமாக தொழிலாளர் சங்கம் நடத்தும்.
 

தமிழக முதல்வர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளதை பார்க்கும்பொழுது இவர்கள் மக்களுக்காக ஆட்சி நடத்தவில்லை, அவர்களின் சுயநலத்திற்காக ஆட்சி செய்துவருகிறார்கள் என்று தெளிவாக தெரிகிறது என்றார். கூட்டத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்யவேண்டும், நூறுநாள் வேலை திட்டத்தில் ஏழைமக்களுக்கு வேலைவழங்கி, கூலியை உடனே கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தீர்மானம் நிரைவேற்றப்பட்டுள்ளது. மாவட்டபொருளாளர் செல்லையா நன்றி கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்