Advertisment

கோரிக்கை வைத்த விவசாயிகள்; ஏற்றுக்கொண்ட தமிழக அரசு!

Farmers made a request; TN govt accepted it

தமிழ்நாட்டில் மக்காச்சோள வர்த்தகம் மேற்கொள்ள தற்போதுள்ள ஒரு சதவீத சந்தைக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் மக்காச்சோளப்பயிர் சராசரியாக 4 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டு 29 இலட்சம் மெட்ரிக் டன் மக்காச் சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது. மக்காச்சோளம் பெரும்பாலும் தீவனத்தயாரிப்புக்காக கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

Advertisment

இந்நிலையில் தற்போது எத்தனால் உற்பத்தி தொழிற்சாலைகளில் மூலப்பொருளாக அதன் தேவை பெரிதும் அதிகரித்துள்ளது. இதனால், தமிழ்நாடு அரசால் மக்காச்சோள சாகுபடி பெருமளவில் விவசாயிகளிடையே ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. 1987ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தை (முறைப்படுத்துதல்) சட்டத்தின்படி வேளாண் விளைபொருள மக்காச்சோளத்திற்கு கோயம்புத்தூர், ஈரோடு, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் திருப்பூர் ஆகிய 7 விற்பனைக்குழுக்களின் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் ஒரு சதவீத சந்தைக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

Advertisment

இந்நிலையில் மக்காச்சோளத்தின் தேவையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் மக்காச்சோள சாகுபடி மேற்கொள்ளப்பட்டு பரப்பு அதிகரித்து உற்பத்தி உயர்ந்தது. இதனையொட்டி மக்காச்சோள விற்பனையை முறைப்படுத்திட வேண்டுமென்பதற்காக பெரம்பலூர், திருச்சி, சேலம், மதுரை, திருநெல்வேலி கடலூர், தேனி, திண்டுக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விருதுநகர், நாமக்கல், காஞ்சிபுரம், வேலூர் மற்றும் அரியலூர் ஆகிய 16 விற்பனைக்குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள 161 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு உட்பட்ட பகுதிகள் 1987ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தை (முறைப்படுத்துதல்) சட்டம் பிரிவு 9 (1) (டி)இன் படி வேளாண் விளைபொருளான மக்காச்சோளம் அறிவிக்கை செய்யப்பட்டது.

மேலும், தமிழ்நாடு அரசிதழ் எண்.1 நாள் : 01.01.2025இல் வெளியிடப்பட்டது. இதன்படி இப்பகுதிகளில் மக்காச்சோள வர்த்தகத்திற்கு ஒரு சதவீத சந்தைக்கட்டணம் வருவிக்கப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள், வியபாரிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற கருத்துகளை ஆராய்ந்து அதற்கேற்ப 1987ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தை (முறைப்படுத்துதல்) சட்டம் பிரிவு 9 (1) (டி) இன் படி வெளியிடப்பட்ட வேளாண் விளைபொருளான மக்காச்சோளத்திற்கான அறிவிக்கை தமிழ்நாட்டின் அனைத்து விற்பனைக்குழு பகுதிகளிலும் இரத்து செய்யப்படுகிறது. இதற்கான அரசிதழ் விரைவில் வெளியிடப்படும்”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Farmers corn
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe