பயிர்க்கடன் தள்ளுபடி ரசீதை நாளை வழங்குகிறார் முதல்வர்!

farmers loans cancel receipt tamilnadu cm

பயிர்க்கடன் தள்ளுபடிக்கான ரசீதை விவசாயிகளுக்கு நாளை (13/02/2021) வழங்குகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

16.34 லட்சம் விவசாயிகளின், ரூபாய் 12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையின் விதி எண் 110 கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான அரசாணையையும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில், பயிர்க்கடன் தள்ளுபடிக்கான ரசீதை விவசாயிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கவுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்கூட்டியே பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

cm edappadi palanisamy loans Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe