Advertisment

டெல்லியில் போராட மன்னார்குடியிலிருந்து புறப்பட்ட விவசாயிகள்!

image

உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி 6 வாரத்தில் மார்ச் 29 -ந் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழகம் முழுவதும் குரல் எழுந்துள்ள நிலையில் பாராளுமன்றம் முடக்கும் செயலில் தமிழக எம்.பிகள் செயல்பட்டு வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில் அமமுக சார்பில் தஞ்சை திலகர் திடலில் நாளை 25- ந் தேதி தினகரன் எம்எல்ஏ தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்க உள்ளது. இதே போல தமிழக காவிரி விவசாயிகள் சங்கம், அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் டெல்லி பாராளுமன்றம் முன்பு பிஆர்.பாண்டியன் தலைமையில் 26 ந் தேதி காலை 9 மணி முதல் 5 மணி வரைஉண்ணாவிரதப் போராட்டம் நடத்த மன்னார்குடியில் இருந்து விவசாய சங்க பிரதிநிதிகள் டெல்லி செல்கின்றர்.

Advertisment

டெல்லியில் போராட்டம் நடத்தச் செல்லும் விவசாயிகளுக்கு மன்னார்குடியில் மேளதாளங்கள் முழங்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Farmers leaving Mannar to fight in Delhi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe