kamal haasan

’மக்கள் நீதி மய்யம்‘ கட்சித்தலைவர் கமல்ஹாசன், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தோல் தொழில்நுட்ப அமைப்பு சார்பில் நடைபெறும் விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்ற வேண்டும் என்று மாணவர்கள் விரும்பியதால், கமலும் அதற்கு சம்மதித்துள்ளார்.

Advertisment

இன்று 24.3.2018 விழாவை ஏற்பாடு செய்து, விழாவில் 6 ஆயிரம் பேர் பங்கேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாணவர்கள் செய்துவிட்டனர். விழாவிற்கான அழைப்பிதழை கமலுக்கு நேரில் வழங்கிவிட்டனர். இந்நிலையில், இன்று நடைபெற இருந்த விழா ரத்து ஆகியுள்ளது. விழாவில் கமல் பங்கேற்பதையும், அவர் மாணவர்களிடையே பேசுவதையும் விரும்பாத அரசு இந்த விழாவை ரத்து செய்யச்சொல்லி அழுத்தம் கொடுத்ததால் விழா ரத்தாகியுள்ளது என்று தகவல்.

Advertisment