விவசாயிகளின் அர்ப்பணிப்பை போற்றும் வகையில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி

Farmers

கரோனா ஊரடங்கு காலத்திலும்அயராது உழைத்துஊருக்கு உணவளித்து வரும் விவசாயிகளை, விவசாய கூலித்தொழிலாளர்களை ஊக்குவிக்கும் மற்றும் போற்றும் விதமாகவும், மரியாதை செலுத்தும் விதமாகவும் இந்தியா முழுவதும் மே 16 தேதி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமமான குந்தபுரம் கிராமத்தில் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சியில் பெண் விவசாயிகளை பெண்களே ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு சார்பில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பெண்கள் பொன்னாடை போத்தி விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு சார்பில் விவசாயியான சங்கீதா சக்திவேல் பெண் விவசாயிகளுக்கு கதர் ஆடை போர்த்தி மரியாதை செய்தார்.

Ariyalur Farmers
இதையும் படியுங்கள்
Subscribe