Farmers demand engineer Sir. Arthur Cotton birthday should be made a government function

காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரிக்கரை கந்தகுமாரன் பகுதியில் புதன் கிழமை கொள்ளிடம் ஆற்றில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை அணைக்கரையில் (கீழணை) 1836ம் ஆண்டு கதவணை கட்டி வீராணம் ஏரிக்கு தண்ணீரை திருப்பிவிட்டு, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் பகுதியை வளம் கொழிக்கும் பகுதியாக மாற்றியவரும். 1825ல் வீராணம் ஏரி உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள பல ஏரிகளை மறு புனரமைப்பும் செய்தவர் ஆங்கிலேய பொறியாளர் சர். ஆர்தர் காட்டன்.

Advertisment

இவரை தென்னிந்தியாவின் நீர் பாசனத்தின் தந்தை என்று அழைக்கின்றனர்.இவரது பிறந்த நாள் விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் வீராணம் ஏரியில் பாசன வசதி பெறும் விவசாயிகள் உள்ளிட்ட சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள விவசாயிகள் திறளாக கலந்துகொண்டு அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Advertisment

அப்போது விவசாயிகள் சர். ஆர்தர் காட்டன் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும், அவரது சிலையை கீழணையில் நிறுவி, அவரது பிறந்த நாளான மே 15 ஆம் தேதியை நீர் பாசன மேலாண்மை தினமாக கொண்டாட வேண்டும், வீராணம் ஏரியை உருவாக்கிய ராஜதித்திய சோழனுக்கு வீராணம் ஏரி பகுதியில் மணி மண்டபம் அமைக்க வேண்டும், வறண்டு கிடக்கும் வீராணம் ஏரியை என்எல்சி இந்தியா நிதியுதவியுடன் தூர் வாரிட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.