Skip to main content

மரங்களில் நோய் தாக்குதல்;வாழ்விழக்கும் முருங்கை விவசாயிகள்!!

Published on 14/07/2019 | Edited on 14/07/2019

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு ஒன்றிய கிராமப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட முருங்கை மரங்களை நோய் தாக்குதல் காரணமாக  வெட்டி நிலங்களில் போட்டு வருகின்றனர்

நடகோட்டை, விருவீடு, வலையபட்டி, ராஜதானி கோட்டை, சந்தையூர், விராலிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டு வரப்படுகிறது. கடந்த ஆண்டு கடும் வறட்சி அதனைத் தொடர்ந்து வந்த கஜா புயலினாலும் இப்பகுதியில் ஏராளமான முருங்கை மரங்கள் காய்ந்தும்,பலத்த காற்றுக்கு வேரோடு சாய்ந்தம் போயின.

 Farmers cut and thrown the trees

தற்போது போதிய விலையும் கிடைக்காத நிலையில் எஞ்சிய மரங்களை விவசாயிகள் வளர்த்து வந்தனர். இந்நிலையில் திடீரென முருங்கை மரங்களை இலை சுருட்டல் எனும் பெயர் தெரியாத நோய் தாக்கியது. இந்த நோய்க்கு எந்த மருந்து அடித்து நோயை கட்டுப்படுத்துவது  என தெரியாமல் விவசாயிகள் திண்டாடினர்.  இலைகள் காய்ந்து காய்களும் கருத்து காய தொடங்கின. இதனால் வேதனையடைந்த விவசாயிகள் வேறுவழியில்லாமல் மரங்களை வெட்டி விளைநிலங்களில் போட்டுவிட்டு செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

 

 Farmers cut and thrown the trees


இது குறித்து கூறும் விவசாயிகள் விருவீடு பகுதியிலிருந்து நாளொன்றுக்கு ஒரு டன் முதல் 5 டன் வரை முருங்கை காய்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும் ஆனால் தற்போது கடும் வறட்சி, புயல் அதோடு சேர்ந்து விலை கிடைக்காததால் விவசாயிகள் முருங்கை மரங்களை  பராமரிக்க முடியாமல் மிகவும் கஷ்டம்  அடைந்ததாகவும் 15 நாட்களுக்கு ஒரு முறை புதிய மருந்து அடிக்காவிட்டால் முருங்கை மரம் வாடி விடும் என்பதால் பொருளாதார ரீதியாகவும் முருங்கை மரங்களை காப்பாற்ற முடியாமல் பல விவசாயிகள் தவித்ததாகவும் கூறுகின்றனர். மேலும் முருங்கை இலையை தாக்குவது எந்த வகையான நோய் என்பது கூட தெரியாமல் நாங்கள் தவித்த வேளையில் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் யாரும்  எட்டிக்கூட பார்க்கவில்லை என  வத்தலகுண்டு விவசாயி ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டுகின்றார்.

 Farmers cut and thrown the trees


மேலும்  அவர் கூறும்போது, இப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான முருங்கை பவுடர் தொழிற்சாலையை கண்டிப்பாக கொண்டு வருவேன் என உறுதி ஏற்று கூறிச் செல்லும்  இரண்டு முறை ஜெயித்த தேன்மொழி உட்பட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் இதுவரை தொழிற்சாலை கொண்டு வருவதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் முற்றிலும் ஏமாற்றம் அடைந்துள்ள விவசாயிகள் இனியும் இந்த அரசை நம்பி பயனில்லை என்பதற்காக தங்கள் பாடுபட்டு வளர்த்த மரங்களை தாங்களே வெட்டி விளைநிலங்களில் போட்டு வருகின்றனர் என்றார். இதனால் பெரிய அளவு நஷ்டத்தை சந்தித்து உள்ள விவசாயிகள் அரசு உதவினால் மட்டுமே தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்று கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.