பயிர்க்கடன் தள்ளுபடி - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

farmers crop loans tamilnadu government

ரூபாய் 12,110.74 கோடி பயிர்க்கடன் தள்ளுபடிக்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, விவசாயிகளால் பெறப்பட்டு ஜனவரி 31- ஆம் தேதி வரை நிலுவையில் இருந்த பயிர்க்கடன், வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது. அபாரத வட்டி மற்றும் இதர செலவினங்களை, சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களே ஏற்க வேண்டும். சிட்டா, பட்டாவுடன் குறிப்பிட்ட நிலத்தில் பயிர் செய்ய நகையீட்டின் பெயரில் பெறப்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. வேளாண்மை சாராத இனங்களுக்கு வழங்கப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படாது. பயிர்க் கடன்களுக்காக மானியம் பெற்றிருந்தால் எஞ்சிய தொகை மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்.

குற்ற நடவடிக்கை, நிதி முறைகேடுகளுக்கு உள்ளான இனங்களுக்கு கடன் தள்ளுபடி இல்லை. கூட்டுறவு சங்கங்களுக்கு மொத்த தள்ளுபடி தொகை 7% வட்டியுடன் தவணைகளில் 5 ஆண்டில் விடுவிக்கப்படும். நபார்டு வங்கிக்கு செலுத்தப்பட வேண்டிய தொகையை வட்டியுடன் அரசே செலுத்தும். ஒவ்வொரு விவசாயிக்கும் கடன் தள்ளுபடி சான்றிதழ், நிலுவையின்மைச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். தள்ளுபடி செய்யத் தகுதியான கடன்களை வசூலிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகள் புதிய கடன்கள் பெற தகுதியுடையவர்கள். நிலுவையின்மைச் சான்று வழங்கியவுடன் அசல் நிலப்பதிவேடு, ஆவணங்கள், நகைகளைத் திருப்பித் தரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Farmers loans tn govt
இதையும் படியுங்கள்
Subscribe