Skip to main content

திருவாரூரில் தொடரும் விவசாயிகள் போராட்டம்

Published on 15/09/2018 | Edited on 15/09/2018
thiruvarur

 

திருவாரூர் அருகே கருகும் பயிர்களை காப்பாற்ற உடனடியாக தண்ணீர் வழங்கவேண்டும் என விவசாயிகள் பல  இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

 

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி 3.50 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது தண்ணீர் இன்றி பயிர் கருகி வருகிறது. இதனால் விவசாயிகள் சம்பா சாகுபடி முதற்கட்ட பணிகளிலில் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து பெரும் வேதனையடைந்துள்ளனர்.

 

 இந்நிலையில் விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்ட சம்பா சாகுபடியை  காப்பாற்ற உடனே தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.  இது குறித்து பொதுப்பணித்துறை, மாவட்ட நிர்வாகத்திடமும் பலர் முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. என ஆத்திரமடைந்த விவசாயிகள் திருவாரூர் அருகே ஆண்டிபந்தல் கடைவீதியில் விவசாயிகள் மகிழ்ஞ்சேரி, ஆண்டிபந்தல், பனக்குடி, நாககுடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கருகும் சம்பா நெற்பயிர்களை காப்பாற்ற தண்ணீர் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 விவசாயிகள் 200க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தில்  கருகி வரும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் உள்ள சம்பா பயிர்களை காப்பாற்ற புத்தாற்றில் முறைவைக்காமல் தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

 

மறியல் போராட்டம் காரணமாக திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பொதுப்பணித்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாலைக்குள் தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.


 

சார்ந்த செய்திகள்