/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/11_215.jpg)
மத்திய, மாநில அரசுகளின் உதவியை விவசாயிகள் முறையாகப் பயன்படுத்தி வாழ்வில் உயர வேண்டும். மேலும் மத்திய அரசு அவர்களுக்கு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கொமதேக பொதுச் செயலாளரும்எம்எல்ஏவுமானஈஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார்.
விவசாயிகள் சங்க கூட்டத்தில் திங்கள்கிழமை உரையாற்றிய அவர், “விவசாயத் துறை லாபகரமாக இல்லை என்ற எண்ணம் நிலவுகிறது. உண்மையில், மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் விவசாயத் துறைக்கு பல கோடி ரூபாய் செலவழிக்கிறது. ஆனால் அந்த நிதி பயன்படுத்தப்படாமல் திருப்பி ஒப்படைக்கப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால், யூரியாவுக்கு எவ்வளவு மானியம் வழங்கப்படுகிறது என்பது கூட விவசாயிகளுக்கு தெரியாது. மத்திய அரசு வழங்கும் மானியங்களைப் புரிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை. விவசாயத் துறையில் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. எனவே, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் உள்ளவர்கள் விவசாயம் செய்ய பொள்ளாச்சிக்கு வந்துள்ளனர். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ரூபாய் லாபம் ஈட்டுகின்றனர். உண்மையில்அதிகபட்ச லாபம் 5 சதவீதமாக இருக்கும் தொழில்களில் இவ்வளவு லாபம் பெற முடியாது.
கொங்கு மண்டலத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. எனவே, சொட்டு நீர் பாசனத்திற்கு மானியம் பெறலாம். அத்திக்கடவு அவினாசி திட்டத்தை சொட்டு நீர் பாசன முறையாகவும் மாற்றலாம். பாமாயில் மீதான 35 சதவீத இறக்குமதி வரி நீக்கப்பட்டது. அதனால், உள்ளூர் எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு லாபம் கிடைக்கவில்லை. விவசாயத் துறை லாபகரமாக இல்லை என்பதைத் தெரிவிக்காமல்விவசாயிகள் அதை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.
இந்த ஆண்டு விவசாயத் துறைக்கு ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் விவசாயிகள் அக்கடனை முழுமையாகப் பெறவில்லை. அவர்கள் தனியார் நிதியாளர்களிடம் செல்கின்றனர். எனவே, விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையொட்டி, பொள்ளாச்சியில் ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் விவசாயிகள் மாநாடு நடைபெற உள்ளது. அதில் கலந்து கொண்டு பல தகவல்களை பெறலாம்” இவ்வாறு அவர் கூறினார். பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம், நாமக்கல் எம்பி சின்ராஜ் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)