Advertisment

விறகில்லா பொங்கல் வைத்த விவசாயிகள்! 

Farmers celebrate pongal

Advertisment

அரியலூர் மாவட்டம், வெற்றியூர் கிராமத்தில் விறகில்லா பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விறகில்லாமல் பொங்கல் வைத்து கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது.

நோய் எதிர்ப்பு ஆற்றலையும், அதிக நார்ச்சத்தையும் கொண்ட மாப்பிள்ளை சம்பா அவலைக் கொண்டு இந்த விறகில்லா பொங்கல் வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் இப்பொங்கல் எப்படி வைக்க வேண்டும் எனும் செய்முறையும் அவர் விளக்கினார். அதன்படி, ‘மாப்பிள்ளை சம்பா அவலை நன்கு ஊரவைத்து, அதனுடன் முதல் நாள் இரவே மழை தண்ணீரில் ஊறவைத்த வெல்லத்தை கரைத்து அடுப்பில் சூடு செய்யாமல் வெல்லப்பாகு தயாரித்து; ஊறவைத்த மாப்பிள்ளை சம்பா அவலில் வெல்லப்பாகு கலந்து, ஏலக்காய், வழக்கமாக பயன்படுத்தும் முந்திரி பருப்பிற்கு பதிலாக ஏழைகளின் முந்திரிப்பருப்பு என அழைக்கப்படும் நிலக்கடலையை பயன்படுத்தி அடுப்பில்லாமல் மண்பானையில் கலக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இது குறித்து தங்க சண்முக சுந்தரம் கூறும் போது, “மாப்பிள்ளை சம்பா அவல் எளிதில் செரிக்கக்கூடியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. அரியலூர் மாவட்டத்தில் இயற்கை ஆர்வலர்கள் பலரும் தங்களது பகுதிகளில் மாப்பிள்ளை சம்பா பயிரிட்டு பல மாவட்டங்களுக்கும் பரவலாக்கி வருகின்றனர். என்றார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

pongal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe