ADVERTISEMENT

குறைதீர்ப்பு கூட்டம்; கலங்கிய குடிநீருடன் ஆட்சியரை முற்றுகையிட்ட விவசாயிகள்

06:12 PM May 31, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி முன்னிலையில் நடந்தது. துறை சார்ந்த அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிகள், நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளைப் பற்றி பேசினார்கள். மிசா மாரிமுத்து பேசும் போது.. திரும்ப திரும்ப பேச வருவது வெட்கமாக உள்ளது. எங்கள் கோரிக்கை நிறைவேற்றினால் ஏன் திரும்ப திரும்ப பேசுகிறோம். காவிரி குண்டாறு வரனும். ஏரி குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றார்.

விவசாயி துரைமாணிக்கம், “காப்பீடு பணம் வந்தால் தான் விதை வாங்கலாம். ஆகவே காப்பீடு தொகையை விரைந்து வழங்க வேண்டும்” என்றார். விவசாயி சுப்பையா.. தைல மரம், சீமைகருவேல மரங்களை அகற்றுவதில்லை. கேட்டால் அகற்றுவோம் என்று சொல்வதோடு அதிகாரிகளின் வேலை முடிந்துவிடுகிறது. கடவாக்கோட்டை கண்மாய் மழை வெள்ளம் வெளியேற்ற உடைக்கப்பட்டது மறுபடி சீரமைக்கவில்லை. மறுபடி மழை வெள்ளம் வந்தால் கிராமம் மூழ்கும். அதிகாரிகள் கண்கொள்ளவே இல்லை.

இப்படி முன்பதிவு செய்த பலர் பேசி முடித்த நிலையில் விவசாயிகளின் கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் சொல்ல அழைக்கப்பட்ட போது, ஏராளமான விவசாயிகள் எழுந்து, விவசாய சங்க பிரதிநிகளுக்கு மட்டும் முன்பதிவு செய்யப்படுகிறது. ஆனால் தனி நபர்கள், விவசாயிகள் தங்கள் கோரிக்கையை சொல்ல நினைத்து வந்தால் எங்களுக்கு அனுமதி இல்லை. கோரிக்கையை எப்படிச் சொல்வது? இனிமேல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் என்பதை மாற்றி விவசாய சங்க பிரதிநிதிகள் குறைதீர் கூட்டம் என்று சொல்லலாம் என்றனர்.

இதனைக் கேட்ட மாவட்ட ஆட்சியர், அடுத்தடுத்த கூட்டங்களில் விவசாயிகளும் முன்பதிவு செய்து பேச வாய்ப்பளிக்க வேண்டும். தவிர்க்க கூடாது என்று கூறியதுடன் பேச வாய்ப்பில்லாத விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் இப்போதே நேரில் கொடுத்து விபரங்களை அறியலாம் என்றார். தொடர்ந்து அதிகாரிகள் பதில் கூறும் போது, கால்நடை அலுவலர். இலுப்பூரில் 42 கால்நடை மருந்தகத்தில் 21 மருத்துவர்களே உள்ளனர். அதனால் காலதாமதம் ஏற்படுகிறது என்றார்.

நீர்வளத்துறை பெண் அதிகாரி ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்த விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் கூறும் போது.. நீர்வளத்துறை ஆக்கிரமிப்பு அகற்றப் போனால் பாதுகாப்பு இல்லை. கவிநாடு கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்றப் போனபோது ஒரு வழக்கறிஞரே 'அன்பார்லிமெண்ட்' வார்த்தைகளில் பேசுகிறார். அவர் பற்றி பார்கவுன்சிலில் புகார் கொடுத்திருக்கிறோம் என்றார்.

அப்போது எழுந்த சில விவசாயிகள் அதிகாரிகளே பாதுகாப்பு இல்லைனு சொல்லலாமா? என்றனர். நான் விவசாய செய்த நிலத்தில் விவசாயம் இல்லை என்று கூட்டுறவு சங்கம் சொல்லி விவசாயிகளை கொச்சைப்படுத்தலாமா? என்ற விவசாயி மகேந்திரனின் கேள்விக்கு கூட்டுறவுத் துறை அதிகாரி உரிய விசாரணை செய்வதாக கூறினார்.

காவிரி குண்டாறு பற்றிய கேள்விக்கு பதில் அளித்த மாவட்ட வருவாய் அலுவலர் (காவிரி குண்டாறு) 2023 - 24 ரூ.180 கோடி நிலமெடுப்பிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறும் போது கூட்டமாக எழுந்த விராலிமலை ஒன்றியம் குன்னத்தூர் பகுதி விவசாயிகள்.. நிலமெடுப்பு பணியில் தவறு நடக்கிறது. கோரையாற்றில் குண்டாறு இணைக்க அப்பகுதியில் உள்ள சாராய ஆலைக்கு சாதகமாக செயல்படுகிறார்கள் அதிகாரிகள் என்று கூறி ஆட்சியர் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து மது தொழிற்சாலை கழிவுகள் நிலத்தடி நீரில் கலந்து குடிநீர் கலங்கி வருகிறது என்று கலங்கிய தண்ணீர் பாட்டில்களுடன் ஆட்சியர் முன்பு முற்றுகையிட்டு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த தண்ணீரை வாங்கிப் பார்த்த மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT