Skip to main content

குறைதீர்ப்பு கூட்டம்; கலங்கிய குடிநீருடன் ஆட்சியரை முற்றுகையிட்ட விவசாயிகள்

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

  farmers came grievance redressal meeting with disturbed drinking water District Collector

 

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி முன்னிலையில் நடந்தது. துறை சார்ந்த அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிகள், நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளைப் பற்றி பேசினார்கள். மிசா மாரிமுத்து பேசும் போது.. திரும்ப திரும்ப பேச வருவது வெட்கமாக உள்ளது. எங்கள் கோரிக்கை நிறைவேற்றினால் ஏன் திரும்ப திரும்ப பேசுகிறோம். காவிரி குண்டாறு வரனும். ஏரி குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றார்.

 

விவசாயி துரைமாணிக்கம், “காப்பீடு பணம் வந்தால் தான் விதை வாங்கலாம். ஆகவே காப்பீடு தொகையை விரைந்து வழங்க வேண்டும்” என்றார். விவசாயி சுப்பையா.. தைல மரம், சீமைகருவேல மரங்களை அகற்றுவதில்லை. கேட்டால் அகற்றுவோம் என்று சொல்வதோடு அதிகாரிகளின் வேலை முடிந்துவிடுகிறது. கடவாக்கோட்டை கண்மாய் மழை வெள்ளம் வெளியேற்ற உடைக்கப்பட்டது மறுபடி சீரமைக்கவில்லை. மறுபடி மழை வெள்ளம் வந்தால் கிராமம் மூழ்கும். அதிகாரிகள் கண்கொள்ளவே இல்லை.
 

இப்படி முன்பதிவு செய்த பலர் பேசி முடித்த நிலையில் விவசாயிகளின் கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் சொல்ல அழைக்கப்பட்ட போது, ஏராளமான விவசாயிகள் எழுந்து, விவசாய சங்க பிரதிநிகளுக்கு மட்டும் முன்பதிவு செய்யப்படுகிறது. ஆனால் தனி நபர்கள், விவசாயிகள் தங்கள் கோரிக்கையை சொல்ல நினைத்து வந்தால் எங்களுக்கு அனுமதி இல்லை. கோரிக்கையை எப்படிச் சொல்வது? இனிமேல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் என்பதை மாற்றி விவசாய சங்க பிரதிநிதிகள் குறைதீர் கூட்டம் என்று சொல்லலாம் என்றனர்.

 

இதனைக் கேட்ட மாவட்ட ஆட்சியர், அடுத்தடுத்த கூட்டங்களில் விவசாயிகளும் முன்பதிவு செய்து பேச வாய்ப்பளிக்க வேண்டும். தவிர்க்க கூடாது என்று கூறியதுடன் பேச வாய்ப்பில்லாத விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் இப்போதே நேரில் கொடுத்து விபரங்களை அறியலாம் என்றார். தொடர்ந்து அதிகாரிகள் பதில் கூறும் போது, கால்நடை அலுவலர். இலுப்பூரில் 42 கால்நடை மருந்தகத்தில் 21 மருத்துவர்களே உள்ளனர். அதனால் காலதாமதம் ஏற்படுகிறது என்றார்.

 

நீர்வளத்துறை பெண் அதிகாரி ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்த விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் கூறும் போது.. நீர்வளத்துறை ஆக்கிரமிப்பு அகற்றப் போனால் பாதுகாப்பு இல்லை. கவிநாடு கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்றப் போனபோது ஒரு வழக்கறிஞரே 'அன்பார்லிமெண்ட்'  வார்த்தைகளில் பேசுகிறார். அவர் பற்றி பார்கவுன்சிலில் புகார் கொடுத்திருக்கிறோம் என்றார்.

 

அப்போது எழுந்த சில விவசாயிகள் அதிகாரிகளே பாதுகாப்பு இல்லைனு சொல்லலாமா? என்றனர். நான் விவசாய செய்த நிலத்தில் விவசாயம் இல்லை என்று கூட்டுறவு சங்கம் சொல்லி விவசாயிகளை கொச்சைப்படுத்தலாமா? என்ற விவசாயி மகேந்திரனின் கேள்விக்கு கூட்டுறவுத் துறை அதிகாரி உரிய விசாரணை செய்வதாக கூறினார்.

 

காவிரி குண்டாறு பற்றிய கேள்விக்கு பதில் அளித்த மாவட்ட வருவாய் அலுவலர் (காவிரி குண்டாறு)  2023 - 24 ரூ.180 கோடி நிலமெடுப்பிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறும் போது கூட்டமாக எழுந்த விராலிமலை ஒன்றியம் குன்னத்தூர் பகுதி விவசாயிகள்.. நிலமெடுப்பு பணியில் தவறு நடக்கிறது. கோரையாற்றில் குண்டாறு இணைக்க அப்பகுதியில் உள்ள சாராய ஆலைக்கு சாதகமாக செயல்படுகிறார்கள் அதிகாரிகள் என்று கூறி ஆட்சியர் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து மது தொழிற்சாலை கழிவுகள் நிலத்தடி நீரில் கலந்து குடிநீர் கலங்கி வருகிறது என்று கலங்கிய தண்ணீர் பாட்டில்களுடன் ஆட்சியர் முன்பு முற்றுகையிட்டு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த தண்ணீரை வாங்கிப் பார்த்த மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

திருநங்கையால் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகள்! அம்மன் கோயிலுக்கு தூக்கிச் சென்று வழிபட்ட பெண்கள்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ளது கல்லாலங்குடி கிராமம். இங்குள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா சித்திரை மாதத்தில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி ஒரு வாரத்திற்கு மேல் நடக்கும். இதில் கல்லாலங்குடி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, சூரன்விடுதி, சிக்கப்பட்டி, சம்புரான்பட்டி, கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் திருவிழாக்களை கொண்டாடுவார்கள். மேலும் சுற்றியுள்ள பல கிராமமக்களும் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி பெண்கள் இணைந்து சித்ரா பவுர்ணமி குழ அமைத்து முளைப்பாரி எடுக்கத் தொடங்கினர். விநாயகர் கோயிலில் இருந்து குறைவானவர்களே முளைப்பாரி தூக்கி வந்து வழிபட்டனர். இந்த நிலையில் தான் கம்மங்காடு உதயா உள்ளிட்ட சில திருநங்கைகள் வந்து கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு கிராம மக்கள் எல்லோரும் முளைப்பாரி தூக்க வேண்டும் என்று கூறியதுடன் சித்ரா பவுர்ணமி குழு பெண்களுடன் இணைந்து கடந்த ஆண்டு ஒரே மாதிரியான பாத்திரங்களில் விதைகளை தூவி 9 நாட்கள் விரதமிருந்து நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து பெண்களிடம் கொடுத்து ஊர்வலமாக தூக்கிச் சென்று அம்மனை வழிபட்டனர்.

அதே போல இந்த ஆண்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்த திருநங்கை உதயா பவுர்ணமி விழாக்குழு மூலம் முளைப்பாரி தூக்குவோரின் பெயர்களை முன்பதிவு செய்து, கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு சமுதாயக்கூடத்தில் வைத்து சுமார் 400 முளைப்பாரிகளை ஒரே மாதிரியான அலுமினிய பாத்திரத்தில் ஒரே மாதிரியான விதைகளை தூவி, விரதமிருந்து விதை தூவிய பாத்திரத்திற்கு காலை, மாலை என இரு நேரமும் தண்ணீர் தெளித்து, பவுர்ணமி குழுவினர் உதவியுடன் வளர்த்து வந்தார். அனைத்து பாத்திரங்களிலும் ஒரே மாதிரியாக பயிர்கள் வளர்ந்திருந்தது.

செவ்வாய் கிழமை முளைப்பாரித் திருவிழாவிற்கு முன்பதிவு செய்த பெண்கள் ஒரே மாதிரியான சேலையில் வந்தனர். இந்த அழகைக்கான ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். வளர்ந்திருந்த முளைப்பாரிகளை அலங்கரித்து வைத்து ஒரு குடத்தில் அம்மன் சிலை வைத்து பூ அலங்காரம் செய்து வைத்திருந்த நிலையில் கோயில் பூசாரியிடம் அலங்காரத்தில் இருந்த அம்பாள் குடத்தையும் முளைப்பாரிகளை பெண்கள் தலையிலும் தூக்கி வைத்த உதயா அருளாட்டத்துடன் பூசணிக்காய் உடைக்க முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழக்கத்துடன் புறப்பட்ட ஊர்வலம் சுமார் 5 கி மீ தூரத்திற்கு பல பகுதிகளுக்கும் சென்று மீண்டும் முத்துமாரியம்மன் கோயில் வளாகம் வந்தடைந்தது.

women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

அனைத்து முளைப்பாரிகளும் கோயில் வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதன் கிழமை மாலை 4 மணிக்கு மீண்டும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து முளைப்பாரியை ஊர்வலமாக தூக்கிச் சென்று அருகில் உள்ள குளத்தில் விடுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் முளைப்பாரி திருவிழா என்றால் அவரவர் வீடுகளில் நமண்சட்டிகளில் அல்லது வெவ்வேறு பாத்திரங்களில் மண் நிரப்பி நவதானிய விதை தூவி பயிர் வளர்த்து திருவிழா நாளில் தூக்கி வந்து ஊரின் ஓரிடத்தி்ல் ஒன்று கூடி மண்ணடித்திடலைச் சுற்றி வந்து குளங்களில் விட்டுச் செல்வது வழக்கமாக இருக்கும்.

ஆனால் கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு திருநங்கை விரதமிருந்து ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து கிராம மக்களை அழைத்து தூக்கச் செய்து அம்மனை வழிபடச் செய்கிறார் என்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முளைப்பாரியை சிறப்பாக செய்திருந்த திருநங்கை உதயாவிற்கு விழாக்குழு சார்பில் மரியாதை செய்தனர்.