Skip to main content

முல்லைப் பெரியாறுக்காக தமிழக கேரள எல்லையில் 5 மாவட்ட விவசாயிகள் முற்றுகை போராட்டம்!

Published on 05/12/2021 | Edited on 05/12/2021

 

Mullaiperiyaru dam!

 

முல்லைப் பெரியாறு அணையை அகற்றவேண்டும் என்று கோரி கேரள மாநிலத்தில் மோட்டார் பைக் வாகன பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த பேரணிக்கு அனுமதி தரக்கூடாது என்று பெரியாறு வைகை பாசன 5 மாவட்ட விவசாயிகள் மத்திய அரசு கோரிக்கை வைத்தனர். தமிழக கேரள எல்லையை முற்றுகையிட்டுப் போராடுவோம் என்று அறிவிப்பு செய்தனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை முற்றுகைப் போராட்டத்திற்கு வந்த ஐந்து மாவட்ட விவசாயிகளை, உத்தமபாளையம் ஏ.எஸ்.பி. ஸ்ரேயா குப்தா தலைமையிலான போலீசார் குமுளிக்கு விவசாயிகள் செல்வதற்கு அனுமதி மறுத்தனர். ஆனால் சாலை மறியல் செய்வதற்கு அனுமதி தாருங்கள், கேரளாவில் வாகன பேரணி சென்று கொண்டிருக்கிறது என்று கோரிக்கை வைத்தனர்.

 

Mullaiperiyaru dam!

 

இதனால் விவசாயிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பென்னிகுயிக் மண்டபம் செல்லும் வழியில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.போராட்டம் எதிரொலியாக குமுளி லோயர்கேம்ப் மலைச் சாலையில் இருபுறமும் போக்குவரத்து தடைப்பட்டு வாகனங்கள் வரிசையாக நின்றன. 5 மாவட்ட விவசாயச் சங்கத் தலைவர் எஸ்.ஆர். தேவர் ஏ.எஸ்.பி.யிடம் மாவட்ட கலெக்டர் வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதன் பின்னர் வட்டாட்சியர் அர்ஜுனன், துணை வட்டாட்சியர் சுருளி ஆகியோர் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்து விவசாயியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மூலம் அரசுக்குத் தெரியப்படுத்துவோம் என்று கூறினார்.

 

Mullaiperiyaru dam!

 

அதன்பேரில் விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு சென்றனர். இந்த எல்லை முற்றுகை போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் செ. நல்லசமி, 5 மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பொ.பொன்.கட்சி கண்ணன்,  சலேத்துராஜ், ச.அன்வர் பாலசிங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் வழக்கறிஞர் ஈசன், மாவட்ட தலைவர் ஜெ.பொன்னுத்துரை உள்ளிட்ட நூற்றுக்கும் மேலான விவசாயிகள் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரம் தமிழக, கேரளா எல்லையில் போக்குவரத்து தடைபட்டது. லோயர் கேம்பில் இருந்து கேரளா செல்லும் சாலை போலீசாரால் மூடப்பட்டது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; தமிழக அரசு அதிரடி முடிவு!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Mullai Periyar Dam Issue TN govt decision

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மிகப்பெரிய நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும் பணியில் கடந்த 2013 ஆண்டு முதல் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் தமிழகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதால், அதில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவித்தும், கேரளா அரசின் முடிவை எதிர்த்தும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, “நில அளவை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் மேற்பார்வைக் குழுவின் தலைமையில் கேரளா மற்றும் தமிழகத்தை உள்ளடக்கிய கூட்டு சர்வே நடத்த வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதனையடுத்து இது தொடர்பான அய்வு குழுவினரால் ஆய்வு மேற்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில், ‘கேரள அரசு கட்டிவரும் வாகன நிறுத்துமிடம் குத்தகை பகுதிக்குள் இல்லை. நீர்பிடிப்பு மற்றும் நீர் பரவல் பகுதியின் எல்லைகள் பெரியாறு, குமுளி கிராமத்தில் உள்ளன’ என வரைபடத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Mullai Periyar Dam Issue TN govt decision

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்டுவது தொடர்பாக இந்திய நில அளவைத் துறை அளித்த ஆய்வறிக்கையை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “கடந்த 1924 ஆம் ஆண்டு நீர்வளத்துறையால் தயாரிக்கப்பட்ட வரைபடத்தை தற்போதைய ஆய்வு குழு கணக்கில் கொள்ளவில்லை. கேரளா கட்டிவரும் மிகப்பெரிய வாகன நிறுத்துமிடத்தின் மூலப்பகுதி, தரைத்தளம் எங்கு உள்ளது என்பதை ஆய்வு குழு ஆய்வு செய்யவில்லை. வாகன நிறுத்துமிடத்தின் எல்லை நிர்ணயிக்கப்பட்ட போது தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.

மெகா வாகனம் நிறுத்துமிடம் என்பது உணவகம், வாகன பேட்டரி சார்ஜ் செய்யும் இடம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை உள்ளடக்கியது ஆகும். எனவே வாகன நிறுத்துமிடத்தை அளவிடும் போது அதன் சார்பு வசதிகளை கணக்கில் எடுக்க நில அளவைத் துறை தவறிவிட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.