Skip to main content

‘மழையால் பாதித்த மக்களுக்கு புதிய வீடு கட்டிக்கொடுக்க வேண்டும்’ போராட்டத்தில் விவசாயிகள் சங்கம்

Published on 26/12/2020 | Edited on 26/12/2020

 

Farmers' Association in the struggle to 'build new houses for people affected by the flood
                                                            மாதிரி படம் 

 

புரவி புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாயும், வீடுகளை இழந்த அனைத்து மக்களுக்கும் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில்  கான்கிரீட் வீடுகள் அமைத்து தரவேண்டும் என்றும், தமிழ்நாடு  விவசாயிகள் சங்கத்தினர் பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர்.

 

கரோனா பொது முடக்கத்தால் முற்றிலுமாக வேலை வாய்ப்பை இழந்து, வருமானமின்றி, வாழ் நாட்களை நகர்த்தவே படாதபாடு பட்டுக்கொண்டிருந்த பொதுமக்களுக்கு, நிவர் மற்றும் புரவி புயலால் பெய்த தொடர் மழையால் முற்றிலுமாக முடங்கினர்.

 

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அனைத்து விவசாய, மற்றும் தொழிலாளர் குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும், வீடு இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு புது வீடு கட்டித் தரவேண்டும் என திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு  விவசாயிகள் சங்கத்தினர் 300-க்கும் மேற்பட்டோர் போராட்டம் செய்தனர்.

 

போராட்டத்தில்  மத்திய மாநில அரசுக்கு  எதிராக  கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கணக்கெடுக்கும் பணி முடிவடைந்தவுடன்  நிவாரணம் வழங்கப்படும்” - ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி

Published on 24/12/2020 | Edited on 24/12/2020

 

"Relief fund will be provided after the completion of the survey work" - Collector Chandrasekara Sagamuri

 

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் மங்களூர், அரங்கூர், பட்டூர், கீழக்கல்பூண்டி ஆகிய பகுதிகளில் நிவர் மற்றும் புரவி புயலில் பாதிக்கப்பட்ட சோளம்,  பருத்தி, மரவள்ளிக்கிழங்கு, உளுந்து உள்ளிட்ட பயிர்களை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

அதனைத் தொடர்ந்து திட்டக்குடி பேரூராட்சிக்குட்பட்ட அண்ணா பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது திட்டக்குடி பேரூராட்சி  செயல் அலுவலர் மத்தியாஸிடம், பேருந்து நிலையத்தில் யாராவது தள்ளு வண்டியில் வியாபாரம் செய்தால் வண்டிகளையும் பொருட்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.  மேலும் பேருந்து நிலையத்துக்குள் தள்ளுவண்டிகள் வராத அளவில் வேலிகள் அமைக்கவும் உத்தரவிட்டார். மேலும் தள்ளுவண்டி வியாபாரிகளிடம், தள்ளு வண்டிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்வதாகவும் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.


 

அதேபோல் வேப்பூர் வட்டத்திற்கு உட்பட்ட நாரையூர், கண்டப்பங்குறிசி, அரசங்குடிம் நந்தப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சோளம், பருத்தி, உளுந்து, மரவள்ளிக்கிழங்கு பயிர்களை பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடலூர் மாவட்டத்தில் இதுவரையில் 40 ஆயிரம் எக்டேர் பயிர் சேதம் கணக்கிடப்பட்டுள்ளது. தொடர்ந்து  கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கணக்கெடுக்கும் பணிகள் முடிவடைந்தவுடன் உடனடியாக நிவாரணம் வழங்கப்படும்”  என்று கூறினார். 

 

 

Next Story

டார்ச் லைட் வெளிச்சத்தில் மழை வெள்ள சேதத்தை ஆய்வு செய்த அதிகாரிகள்... அதிருப்தியில் விவசாயிகள்...

Published on 16/12/2020 | Edited on 16/12/2020

 

Officials inspect rain flood damage by torch light ...

 

புரவி புயல் செயல் இழந்தாலும் அதன் தாக்கமாக டெல்டா மாவட்டங்கள் முதல் உள்மாவட்டங்கள் வரை தமிழகம் முழுவதும் கன மழை பெய்திருந்தது. இதனால் அறுவடைக்குத் தயாரான நெல் கதிர்களும் கதிர் பிடிக்கும் நெல் பயிர்களும் முற்றிலும் சேதமடைந்தது. இந்த நிலையில் தான், வெள்ளப் பாதிப்புகளை அரசு சிறப்பு அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் என்று அதிகாரிகளையும் தமிழக அரசு அறிவித்தது.

 

இந்த அதிகாரிகள் நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வுக்கு வந்த போது சூரியன் மறைந்துவிட்டது. நெடுவாசல் உள்ளிட்ட கிராமங்களில் டார்ச் லைட் வெளிச்சத்தில் பயிர்களைப் பார்வையிட்டு கணக்குகளை ஆய்வு செய்தனர். பகலில் ஆய்வு செய்தால்தான் பாதிப்புகள் தெரியும் இரவில் டார்ச் லைட் வெளிச்சத்தில் சேதங்களைப் பார்த்தால் எப்படித் தெரியும் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்த நிலையில் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி வேளாண்துறை அதிகாரிகளை அனுப்பி மீண்டும் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார்.