Skip to main content

நெற்பயிர்கள் பாதிப்பு: விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்த விவசாயிகள் சங்கத்தினர்! 

Published on 01/12/2021 | Edited on 01/12/2021

 

Farmers' Association offers consolation to farmers

 

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழமணக்குடி, பூவாலை, அருள்மொழிதேவன், சின்னாண்டிகுப்பம், மணி கொள்ளை, அம்பாள்புரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் தற்போது பெய்த வடகிழக்கு பருவமழை வெள்ளத்தில் மூழ்கி வீணாகும் சூழல் உள்ளது.

 

பாதிக்கப்பட்ட நெல்வயல்களைத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்ட துணைத்தலைவர் கற்பனை செல்வம், ஒன்றியச் செயலாளர் கொளஞ்சி உள்ளிட்ட விவசாயிகள் சங்கத்தினர் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று அழுகிய பயிர்களைப் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்கள்.

 

இதுகுறித்து விவசாய சங்கத் தலைவர்கள் கற்பனை செல்வம், கொளஞ்சி இருவரும் கூறுகையில், “இந்தப் பகுதியில் தற்போது பெய்த மழையால் நெற்பயிர்களில் பச்சை பிடிக்கும் நேரத்தில் ஒருவார காலத்திற்கு மேல் தண்ணீரில் மூழ்கி இருந்துள்ளது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் வடியும் தருவாயில் இருந்தாலும், தண்ணீர் வடிந்தவுடன் அனைத்து பயிர்களும் மடிந்துவிடும். தற்போது தண்ணீர் நிற்க்கும்போது பச்சை பசேலென்று இருக்கும் பயிர்கள் காய்ந்துவிடும்.

 

அப்படியே பயிர்கள் வளர்ந்தாலும் மகசூல் கிடைக்காது. எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்ட நெல் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களைக் கணக்கில் எடுத்து ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும். ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை இறப்பிற்கு கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்” என தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோ கெமிக்கல் ஆலை திட்டத்தை ரத்து செய்யக் கோரி நடைபெற்ற போராட்டம் (படங்கள்)

Published on 11/04/2023 | Edited on 11/04/2023

 

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் இன்று (11-04-2023) காலை 10 மணியளவில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் உள்ள காவிரி படுகையில் நாகப்பட்டினம் பனங்குடியில் அமைய உள்ள சிபிசிஎல் பெட்ரோ கெமிக்கல் ஆலை திட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தொடர் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். 

 

 

Next Story

விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சி.கே.தனபால் காலமானார்.

Published on 16/10/2019 | Edited on 16/10/2019

வேலூர்  மாவட்டம் வாணியம்பாடி அருகே வெள்ளகுட்டை ஊராட்சி நன்னேரி பகுதியை சேர்ந்தவர் சி.கே.தனபால் (82).  இவர் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளராக  இருந்து வந்தார். 
 

 Farmers' Union State Secretary CK Danapal passed away


இந்நிலையில் அக்டோபர் 14 ந்தேதி இரவு வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி  மரணமடைந்தார். இவருக்கு மனைவி வசந்தா, மகன் குயில்தாசன், மகள் மணிமொழி உள்ளனர். இறந்த சி.கே.தனபால் உடலுக்கு பல்வேறு விவசாயிகள் சங்கத்தினர், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.