Advertisment

ரசாயனம் கலந்து விதைத்த விவசாயி... துடிதுடித்து மரணித்த மயில்கள்!

Farmer who sowed with chemicals ... Peacocks dying

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள ஆ.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சந்திரன். இவர் தனக்கு சொந்தமான வயலில் மக்காச்சோளம் பயிரிட்டு அதனை பராமரித்து வருகிறார். இந்நிலையில் மக்காச்சோளப் பயிர்களை அப்பகுதியில் வசிக்கும், மயில்கள் அதிகளவு சேதப்படுத்தியதால் மக்காச்சோளப் பயிரை காப்பாற்ற வயலில் அதிக விஷத்தன்மை கொண்ட குருணை மருந்தினை தூவி உள்ளார்.

Advertisment

இதனை தின்ற ஒரு பெண் மயில் மற்றும் 4 ஆண் மயில்கள் என 5 மயில்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தன. கடும் வெயிலில் மயில்கள் செத்துக் கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள் விருத்தாச்சலம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற வனத்துறையினர் செத்துக்கிடந்த மயில்களை காப்பாற்றி உடற்கூறு ஆய்வுக்காக இடைச்செருவாய் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் ஈடுபட்ட வனத்துறைத்துறை அதிகாரிகள் வயல்வெளிக்கு சொந்தக்காரரான சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பயிர்களை காப்பாற்ற மயில்களை சாகடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

PEACOCK Farmers Cuddalore
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe