துப்பாக்கி குண்டு பாய்ந்து விவசாயி படுகாயம்

The farmer was injured in the gunshot

நாமக்கலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து விவசாயி படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் சேப்பங்குளம்பட்டியை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி(55). இவர் கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள எருமப்பட்டி என்ற பகுதியில் உள்ள தோட்டமுடையான்பட்டி என்ற இடத்தில் குத்தகைக்கு நிலம் எடுத்துவிவசாயம் செய்து வருகிறார். இன்று வழக்கம் போல் அதிகாலை சுப்பிரமணி தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது பயிர்களை அழிக்க வரும் விலங்குகளை சுடுவதற்காக தானாக இயங்கும் வகையில் நாட்டு துப்பாக்கி ஒன்று இருந்தது.

அந்த துப்பாக்கியிலிருந்து தானாக வெளியேறிய குண்டு விவசாயி சுப்பிரமணியன் காலில் பாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது. வலது காலில் குண்டு பாய்ந்ததால் சத்தமிட்ட சுப்பிரமணி அங்கிருந்தநபர்களால் மீட்கப்பட்டு நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த எருமைப்பட்டி காவல் நிலைய போலீசார் சம்பந்தப்பட்ட நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்து அது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Farmers police village
இதையும் படியுங்கள்
Subscribe