விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள டி.மடிவாராயனூரை சேர்ந்த செல்வம் மகன் 30 வயது பாலாஜி, இவர் தனியாக விவசாயம் செய்து வருகிறார். அதற்கு உதவியாக விழுப்புரத்தில் உள்ள மகேந்திரா டிராக்டர் கம்பெனியில் 9 மாதங்களுக்கு முன்பு 6.50 லட்சம் மதிப்பில் புது டிராக்டர் வாங்கி விவசாயம் செய்து வந்துள்ளார். தவணை முறையில் செலுத்த சொல்லி மகேந்திரா பைனாஸ் கம்பெனி கடன் பெற்று தந்துள்ளது .

Advertisment

former suicide in viluppuram

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

அதன்படி பாலாஜி மாதம் தோறும் 5ம் தேதிக்குள் தவறாமல்தவணை செலுத்தி வந்துள்ளார். இந்த மாதம் தவணை கட்ட முடியவில்லை இதனை அறிந்து பைனாஸ் கம்பெனி மேலாளர் மற்றும் ஊழியர்கள் பாலாஜி வீட்டுக்கு நேற்றுக்குபடையெடுத்தனர். தவணை பணத்தை இன்றே கட்ட வேண்டும் என்று தகராறு செய்தனர். பாலாஜி குடும்பத்தினர் அந்த ஊழியர்களிடம்கெஞ்சினார்கள். சில நாட்கள் அவகாசம் கேட்டனர் முடியாது என கூறிய ஊழியர்கள்டிராக்டரை பறிமுதல் செய்து எடுத்து செல்ல முயன்றனர்.

இந்த பரபரப்பான சம்பவத்தை ஊர் மக்கள் வேடிக்கை பார்த்தனர் இதனால் பாலாஜிக்கு அவமானமாகிவிட்டது. அப்போது அவரது சித்தப்பா பாபு பாலாஜி கட்ட வேண்டிய தவணை தொகையை கம்பெனி ஊழியர்களிடம் கொடுத்து நிலமையைசமாளித்துள்ளார். இதனால் அவமானம் மன வேதனையடைந்த அவர்ஒரு தவணை தொகை பாக்கிக்காக ஈவு இரக்கமில்லாமல் நடந்து கொண்ட கம்பெனியினர் செயளால் மனமுடைந்து நேற்றுமாலையே விஷம்அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Advertisment

former suicide in viluppuram

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

விபரமறிந்த அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். ஆனால்சிகிச்சை பலனளிக்காமல் பாலாஜி பரிதாபமாக இறந்து போனார். இதனை கேள்விப்பட்ட அப்பகுதி விவசாயிகள் மகேந்திரா கம்பெனியின் இரக்கமற்ற செயலால் ஒரு விவசாயியின் உயிர் பரிக்கப்பட்டுள்ளது, இதை சும்மா விட மாட்டோம் என போராட்டத்தில் இறங்க உள்ளனர். இதற்கு ஆளும் எடப்பாடி அரசு என்ன பதில் சொல்லப் போகிறது பார்ப்போம்.